கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே (Ranil Wickremesinghe) ஆதரவு வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடந்து தெரிவிக்கையில், ”ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சில அரசியல் கட்சிகளில் இன்னும் தடுமாற்றங்கள் காணப்படுகின்றன.
அவர்களும் சிறுபான்மைக் கட்சி என்ற அடிப்படையில் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்தால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு பெருமளவான வெற்றி கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது என்பது நேரத்தை வீணடிக்கும் செயற்பாடு மட்டுமல்லாது நாட்டு மக்களைக் குழப்பும் வகையிலான செயற்பாடு” என குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.