பங்களாதேஷில் தீவிரமாகும் போராட்டம்! ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் குறித்து தகவல்

11

பங்களாதேஷில் வசிக்கும் இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

பங்களாதேஷில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி 2500 இலங்கையர்கள் பங்களாதேஷில் தற்போது வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பங்களாதேஷில் உள்ள இலங்கையர்களில் ஒன்பது மாணவர்கள் உயர்கல்வியை தொடர்வதாகவும் இவர்களில் எட்டு மாணவர்கள் சிட்டகாங் மருத்துவக் கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ளதுடன் மீதமுள்ள மாணவர் பாதுகாப்பாக டாக்காவில் உள்ள உறவினர்களுடன் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை- இந்திய கடற்றொழிலாளர்களின் நேரடி சந்திப்புக்கு இந்தியா இணக்கம்

Comments are closed.