நடிகை கீர்த்தி சுரேஷ், ஆரம்பத்தில் ஒரு நடிகரின் படத்தில் கமிட்டாகி காதல் காட்சி நடிப்பது, நடனம் ஆடிவிட்டு செல்லும் நடிகையாக இருந்தார்.
ஆனால் இப்போது அப்படி இல்லை, தனது கதாபாத்திரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அப்படி கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விரைவில் ரகு தாத்தா என்ற வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கான புரொமோஷன் வேலைகளிலும் படக்குழு படு பிஸியாக உள்ளனர்.
அப்படி படத்தின் ஒரு புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ், அஜித் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், அண்ணாத்த படத்தோட படப்பிடிப்பு ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்தபோது அஜித் சார் படமும் அங்க தான் நடந்தது.
அப்போது தான் அவர்கிட்ட பேசி என்னை அறிமுகப்படுத்திக்கிட்டேன். சின்ன உரையாடல் தான் அது. எங்க அம்மாவும் ஷாலினி மேடமும் நிறைய படங்களில் ஒன்றாக நடித்துள்ளார்கள்.
இப்போது வரைக்கும் அவங்க டச்ல தான் இருக்காங்க. கண்டிப்பாக அஜித் சாரோட பணிபுரிவேன் என நடிகை கூறியுள்ளார்.
Comments are closed.