வெளியிடப்பட்ட 95 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொத்து விபரங்கள்

10

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, 95 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்களை பொதுமக்களின் பார்வைக்காக வெளியிட்டுள்ளது.

ஆவணங்கள் இப்போது ஆணையத்தின் இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை, பொது அதிகாரிகளிடையே வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் அதிகரிப்பதற்கான ஆணையத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

இந்தநிலையில், ஏனைய அரசியல்வாதிகளின் சொத்துப் பிரகடனங்கள் பெறப்படும் வரிசையை பின்பற்றி உரிய காலத்தில் பகிரங்கப்படுத்தப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வெளியிடப்பட்ட தகவல்கள் ஊழல் தடுப்புச் சட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Comments are closed.