ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் (Ranil Wickramasinghe) பசில் ராஜபக்சவிற்கும் (Basil Rajapaksa) இடையில் விரிசல் வரக் காரணம் எஸ்.எம்.சந்திரசேனவிற்காக (S.M Chandrasena) நிபந்தனையற்ற விதத்தில் ஆதரவு வழங்கியமையே என நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அநுராதபுரத்தில் நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பசில் ராஜபக்ச எஸ்.எம்.சந்திரசேன விரும்பிய பதவிகளை வழங்குவதற்காகவே போராடினார் அன்று பசில் ராஜபக்ச நிபந்தனையின்றி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவுக்காக உதவினார்.
பசில் ராஜபக்சவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் ஏதேனும் விரோதம் இருந்திருந்தால், அதற்குக் காரணம் எஸ்.எம்.சந்திரசேனவுக்கு தேவையான பதவிகளை வழங்குவதற்காக நாங்கள் போராடியதே.
நம் உள்ளமும் மனமும் தூய்மையானது எங்களால் முடிந்ததைச் செய்தோம் ஆனால் இன்று அவர்கள் எடுக்கும் முடிவு அவர்களின் முடிவு திரும்பி வருபவர்களுக்கு கட்சியின் கதவு திறந்தே உள்ளது அவர்கள் மகிந்த ராஜபக்சவின் வாசல் வழியாக கட்சிக்கு வந்து செல்லலாம்.
நாமல் ராஜபக்ச ஹம்பாந்தோட்டைக்கு போனாலும் ஹம்பாந்தோட்டை வெற்றி பெற இரண்டாவது வரிசை உள்ளது அனுராதபுரமும் அப்படித்தான் முதல் வரிசைக்குப் போனால் இரண்டாம் வரிசைக்குப் பொறுப்பேற்று,கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர் கட்சி இயந்திரம் மிகவும் வலுவாக உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.