ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள நிகழ்வை நிறுத்தக்கோரி தேர்தல் ஆணையகம் அறிவுறுத்தல்

6

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் (Susil Premajayantha) பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்சா காப்புறுதி’ திட்டத்தை புதுப்பிக்கும் வைபவம் ஒன்றை நடத்துவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணையகம், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நிகழ்வை நடத்துவது ஒரு வேட்பாளரை ஊக்குவிப்பதாக அமையும் என்றும், அதனால் பல்வேறு குழுக்களின் விமர்சனத்திற்கு உள்ளாகலாம் என்றும் தேர்தல் ஆணையகத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறியுள்ளார்.

சுரக்சா காப்புறுதித் திட்டம் பாடசாலை மாணவர்களுக்கான முக்கியமான திட்டமாகும்.

எனினும் தேர்தலை கருத்திற்கொண்டு, ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை ‘சுரக்சா காப்புறுதி’ புதுப்பித்தல் திட்டத்தை ஒத்திவைக்குமாறு ஆணைக்குழு கோரியுள்ளது.

எவ்வாறாயினும், தாம் வேட்பாளர் அல்ல என்றும், எனவே திட்டத்தை புதுப்பிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்வதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

சுரக்சா காப்புறுதித் திட்டம் நிதிப் பற்றாக்குறையால் கடந்த இரண்டு வருடங்களாக இடைநிறுத்தப்பட்டு தமது தலையீட்டினால் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.