நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவி.. குவியும் பாராட்டுக்கள்! என்ன செய்தார் என்று பாருங்க?

11

இன்று தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக திகழ்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆனால் இந்த இடத்திற்கு வருவதுற்கு இவர் மிகவும் பாடுப்பட்டார்.

இவர் முதலில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி, அதன்முலம் மக்கள் மனதில் இடம்பிடித்து பின்பு கதாநாயகனாக தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

இந்த இடத்திற்கு வருவதற்கு இவர் மிகவும் கஷ்டப்பட்டார் இதனால், தான் பட்ட கஷ்டத்தை மற்றவர்கள் பட கூடாது என்ற நோக்கத்தில் தன்னால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், தற்போது இயக்குனர் வசந்தபாலன் அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை எழுதியுள்ளார். அதில் 2021-ம் ஆண்டு கொரோனா இரண்டாம் அலையில் இவர் பாதிக்கப்பட்டதாகவும் அந்த செய்தி அறிந்து திரையுலகில் பலரும் எனக்கு உதவ முன்வந்தனர் என்றும் கூறியுள்ளார். அதில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒருவர்.

அன்று நான் மருத்துவ காப்பீடு போட்டியிருந்ததால் அதுவே கவர் ஆகி விட்டது நீங்கள் பணம் தேவையா என்று கேட்டதே பெரும் மகிழ்ச்சி மிகவும் நன்றி என்று கூறினேன்.

மேலும், இயக்குனர் ராசு மதுரவன் போன்று நானும் அவருடன் எந்த விதத்திலும் சம்மந்தமில்லாதவன் இருப்பினும் அவர் முன்வந்து உதவ முற்ப்படுவது மிக பெரிய விஷயம் அதற்கு சிவா அவர்களுக்கு நன்றி என குறிப்பிட்டிருந்தார். இதைதொடர்ந்து, கரு.பழனியப்பன் தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.

அதில், மறைந்த இயக்குனர் ராசு மதுரவனின் பிள்ளைகள் படிப்பு செலவை முழுவதும் நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொண்டார் அதற்கு ராசு மதுரவனின் மனைவி நன்றி தெரிவித்தார். இந்த செய்தி அறிந்த பலரை போல நானும் நெகிழ்ந்தேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

Comments are closed.