விஜய் மகன் இயக்கப்போகும் படத்தின் ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா.. உண்மையா? இல்லை உருட்டா?

13

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு வெளிவந்தது

ஆனால், இதுவரை இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவில்லை. படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் மட்டுமே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். சமீபத்தில் கூட சஞ்சய்யின் பிறந்தநாள் அன்று லைகா நிறுவனம் வாழ்த்து கூறி பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தது.

இப்படத்தில் ஹீரோவாக கவின் நடிக்கப்போகிறார் என சொல்லப்பட்டது. ஆனால், அதன்பின் அது உண்மையில்லை என தெரியவந்தது. இந்த நிலையில், இப்படத்தில் நடிக்கப்போகும் ஹீரோ, ஹீரோயின் மற்றும் இசையமைப்பாளர் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தில் ஹீரோவாக விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்கிறார் என்றும், ஹீரோயினாக ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார் என்றும் கூறுகின்றனர். மேலும் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன் கமிட்டாகியுள்ளாராம்.

இப்படியொரு தகவல் இணையத்தில் பரவி வரும், இவை அனைத்துமே பொய் தான், இதில் எதுவும் உண்மையில்லை, வெரும் வதந்தி மட்டுமே என தெரியவந்துள்ளது. ஆம், இது முழுக்க முழுக்க தவறான தகவல் மட்டுமே. படத்தின் நடிக்கப்போகும் நடிகர், நடிகைகள் குறித்து விரைவில் படக்குழுவிடம் இருந்து அறிவிப்பும் வெளியாகும் என கூறப்படுகிறது.

Comments are closed.