முதியோர் உதவித்தொகை, சுகயீன கொடுப்பனவு, விவசாய ஓய்வூதியம் போன்ற கொடுப்பனவு தொகையை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, புற்றுநோய் கொடுப்பனவு, முதியோர் கொடுப்பனவுகள் உள்ளிட்ட சுகவீன கொடுப்பனவு சுமார் 3,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, உதவித் தொகையை 5,000 ரூபாவாக உயர்த்தி திருத்தப்பட்ட கொடுப்பனவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாழ்க்கைச் செலவு படிப்படியாக அதிகரித்து வருவதால் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுக்கமைய, வரி அதிகரிப்பு போன்ற காரணங்களால் அநீதிக்கு உள்ளாகும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த உண்மைகளை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் உதவித்தொகை அதிகரிக்கப்படும் என்று அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Comments are closed.