நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பரப்பப்படும் தகவல்களில் உண்மைத்தன்மை இல்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியதை தொடர்ந்தே இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் பிரகாரம், நேற்று நள்ளிரவு முதல் விலை குறையும் என்ற கணிப்பின்படி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை பதிவு செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காரணத்தினால் நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய தற்போது எந்த பிரதேசத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments are closed.