சன் டிவியின் டிஆர்பியில் தொடர் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் டாப்பில் இருந்த சீரியல் சிங்கப்பெண்ணே.
கடந்த சில வாரங்களாக அழுத்தமான கதைக்களம் அமையாததால் டிஆர்பியில் 2 மற்றும் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
கிராமத்தில் இருந்து வந்த பெண் நகரத்தில் என்னென்ன சந்திக்கிறார், அவர் எதிர்க்கொள்ளும் சவால்களை எப்படி சமாளிக்கிறார்.
கொஞ்சம் மனதை தடுமாற விட்டால் என்ன நடக்கிறது என நிறைய விஷயங்களை தொடர் காட்டி வருகிறது.
பண கஷ்டத்திற்காக நகரத்திற்கு வரும் பெண்கள் எப்படியெல்லாம் தைரியமாக இருக்க வேண்டும் என பெண்களுக்கான ஒரு தொடராக அமைந்துள்ளது.
சிங்கப்பெண்ணே தொடரின் இன்றைய எபிசோடிற்கான புரொமோவில் ஆனந்தி கர்ப்பமாக இருப்பதாக வாடர்ன், தோழிகள், மகேஷ், அன்பு அனைவரிடம் கூறுகிறார்கள். இதனை கேட்டு எல்லோருமே செம ஷாக்.
அடுத்து என்ன நடக்கப்போகிறது எப்படி கதை செல்லும் என தெரியவில்லை.
ஆனால் அடுத்து கதையில் மகேஷ் பிறப்பின் உண்மை சம்பவத்தின் கதைக்களம் வர இருப்பதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.
Comments are closed.