திடீர் வாகன விபத்தில் உயிரிழந்த தாயாரின் இறுதிக்கிரியைகள் நேற்று இடம்பெற்ற நிலையில் மகள் இன்று (30) கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு இறுதிப்பரீட்சையை எழுதும் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்துவிட்டு வீடு திரும்பிய குருநாகல், பொல்பிதிகம பகுதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தாயான நிரோஷா தமயந்தி கடந்த 28ஆம் திகதி இரவு விபத்தில் சிக்கி உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் மூத்த மகள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்விகற்று வரும் நிலையில், இன்று (30) இறுதிப்பரீட்சை இடம்பெறவுள்ளது.
கடந்த 28 ஆம் திகதி காலை வேலையை முடித்துவிட்டு, பல்கலைகழக பரீட்சை எழுதும் மகளுக்கு இனிப்புகள் செய்து கொடுப்பதற்காக வீடு திரும்பிய போதே விபத்தில் சிக்கியுள்ளார்.
இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 30 ஆம் திகதி செய்ய தீர்மானிக்கப்பட்ட நிலையில், மகளின் பரீட்சை நிமித்தம் நேற்று (29) திகதி இறுதிக்கிரியை மேற்கொள்ள உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதற்கமைய, உயிரிழந்த தாயின் இறுதிக் கிரியைகள் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் நேற்று (29) கொருவை பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளது.
Comments are closed.