ரஜினியுடன் நடிக்க மறுத்த டாப் ஹீரோ.. காரணம் என்ன தெரியுமா?

12


ஜெயிலர் படத்தின் மெகா ஹிட்யை தொடர்ந்து தற்போது, நடிகர் ரஜினிகாந்த் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தை நடித்து முடித்திருக்கிறார்.

அந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப்பச்சன், பகத் பாசில், ரித்திகா சிங்க், அபிராமி போன்ற பல நடிகர் நடிகைகளும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பித்திருக்கிறது.

இந்தநிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடிக்கயிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டுயிருக்கும் நிலையில். ரசிகர்கள் இந்த தகவல்களை கேட்டவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். கண்டிப்பாக இந்த படம் ஹிட் ஆகும் என்றும் ரசிகர்கள் எதிர்பாக்கின்றனர்.

லியோ படத்தின் போது வந்த கடுமையான விமர்சனங்களை எல்லாம் கூலி படத்தின் மூலம் சரி செய்ய திட்டமிட்டுள்ளார் லோகேஷ். அதனால் இந்த படம் லோகேஷ்க்கு முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன்பே கூலி படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி நல்ல எதிர்பார்ப்பை பெற்றது. கூலி படத்தில் வில்லனாக நடிப்பதற்கு முதலில் ஷாருக்கான் மற்றும் ரன்வீர் சிங்யிடம் கேட்டதாகவும் ஆனால் அதற்கு அவர்கள் ஒப்புகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதை தொடர்ந்து நாகா அர்ஜுனாவிடம் பேசியதாகவும். அதற்கு அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து வில்லனாக யாரை தேர்வு செய்யலாம் என்ற யோசனையில் இருக்கிறாராம் லோகேஷ்.

Comments are closed.