நாட்டைப் பாதுகாக்கத் தவறியதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற விசேட அரசியல் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் தொடர்பில் ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.
அரசியலமைப்பின் 4 வது பிரிவின் கீழ், நாட்டின் பாதுகாப்பிற்கு ஜனாதிபதி பொறுப்பு கூறவேண்டும் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ”நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது பொலிஸாரின் தேவை.
இதனை கருத்தில் கொண்டு புலனாய்வுப் பிரிவு மற்றும் சிறப்பு அதிரடிப் படை செயல்பட வேண்டும். இந்த திறன்களை நாம் இழந்தால் என்ன நடக்கும் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.
போதைப்பொருளை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய பிரசாரம் இந்த வாரம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனை சரியான நேரத்தில் ஆரம்பிக்க வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
Comments are closed.