தோல்வியை கடந்து தான் வெற்றியை அடைய முடியும் என்பார்கள். அது வாழ்க்கையில் மட்டுமில்லாமல் திரையுலகிலும் பொருந்தும். அந்த வகையில் ஒரு படம் வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் மக்கள் கையில் தான் உள்ளது.
ஆனால் பாக்ஸ் ஆபிசில் இதுவரை தோல்வியை காணாத இயக்குனர் ஒருவர் உள்ளார். அவர் இந்திய சினிமாவில் இதுவரை வரலாற்றில் அதிக அளவில் வசூல் செய்த இயக்குனர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் வேறு யாரும் இல்லை பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்த எஸ்.எஸ் ராஜமௌலி . சுமார் 20 ஆண்டுகளாக திரைப்பட துறையில் இருக்கும் இவர் இதுவரை 12 படங்களை இயக்கியுள்ளார்.
ஆனால் அதில் ஒரு படம் கூட தோல்வி அடைய வில்லை. அவர் இயக்கிய அனைத்து படங்களும் மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் தான் . இந்த படங்கள் மூலம் சுமார் ரூ.4300 கோடி லாபம் கிடைத்தது.
அதில் ஏறக்குறைய 80 சதவீதம் கடைசியாக வெளிவந்த பாகுபலி 1 & 2 மற்றும் ஆர்.ஆர்.ஆர் ஆகிய மூன்று படங்களில் கிடைத்தவை. தொடர் வெற்றி படங்களை கொடுத்துவரும் ராஜமௌலி தற்போது மகேஷ் பாபு நடிக்கும் த்ரில்லர் படம் ஒன்றை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.