இலங்கையின் பொதுச் சேவை ஆணைக்குழு,மாகாண நிர்வாக சேவை அதிகாரிகளை தேசிய சேவையில் இணையான பதவிகளுக்கு உள்வாங்குவது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்களைக் கொண்ட புதிய சுற்றறிக்கை, ஏற்கனவே 2020 ஜனவரி 30 மற்றும் 2024 பெப்ரவரி 27 ஆகிய திகதிகளில் வெளியிடப்பட்ட முந்தைய சுற்றறிக்கைகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
வழிகாட்டுதல்களின்படி, மாகாண பொது சேவைகளான கற்பித்தல், தாதி, துணை மருத்துவ சேவை போன்றவற்றில் பணியாற்றுபவர்கள், அதிகாரத்தை வைத்திருக்கும் தொடர்புடைய நியமன அதிகாரியால் தேசிய சேவையில் உள்ள இணையான பதவிகளுக்கு உள்வாங்கப்படலாம்.
புதிய வழிகாட்டுதல்களின்படி, உயர்தரப்பரீட்சையின் இசட் மதிப்பெண்ணின் அடிப்படையில், மாகாண சேவையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அத்துடன், இடமாற்றம் கோரும் பணியாளர் ஒருவர், மாகாண சேவையின் தற்போதைய பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு, சம்பந்தப்பட்ட அமைச்சின் கீழ் அறிமுக பயிற்சியை பெற்றிருக்க வேண்டும்.
இதற்கு மாகாண அரச சேவையின் நியமனம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்,
அதேவேளை இடமாற்றம் கோரும் அதிகாரி ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்.
மாகாண பொது சேவையின் சம்பந்தப்பட்ட நியமன அதிகாரிக்கு மாகாண பொது சேவைகளில் இருந்து அதிகாரியை நிரந்தரமாக விடுவிக்க அதிகாரம் உள்ளது என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.
Comments are closed.