கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், கல்வி கற்பதற்காக வெளிநாடுகளுக்குச் சென்ற 633 இந்திய மாணவர்கள் உயிருடன் நாடு திரும்பவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், அதிகபட்சமாக, கனடாவுக்கு கல்வி கற்கச் சென்ற மாணவர்களில் 172 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்ற கேரளாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் (Kodikunnil Suresh) என்பவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், அமெரிக்கா சென்றவர்களில் 108 மாணவர்கள், பிரித்தானியா சென்றவர்களில் 58 மாணவர்கள், அவுஸ்திரேலியா சென்றவர்களில் 57 மாணவர்கள், ரஷ்யா சென்றவர்களில் 37 மாணவர்கள், ஜேர்மனி சென்றவர்களில் 24 மாணவர்கள் என மொத்தம் 633 இந்திய மாணவர்கள் உயிருடன் நாடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கனடாவில் உயிரிழந்த மாணவர்களில் 9 பேர் வன்முறைக்கு பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.