பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து அதில் நம்பர் 1 ஆக இருப்பவர் ஷாருக்கான். இந்தியா முழுவதும் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர்.
இளம் நடிகர்களுக்கு போட்டியாக இன்றும் பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் போல வளம் வருகிறார். பாலிவுட்டில் மட்டும் இல்லாமல் தமிழ் துறையில் இருக்கும் இயக்குநர்களுடனும் பணி புரிந்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் திரையுலகில் இருக்கும் கோடிஸ்வரர் பட்டியலிலும் இடம் பிடித்தவர்.
ஷாருக்கான் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பதான் என்ற படத்தில் நடித்திருந்தார். இதனால் ரசிகர் முன்பு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்ப்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்தது. ஒரு புறம் விமர்சனங்கள் இருந்தாலும் இந்த படம் 1000 கோடி ரூபாய் மேல் வசூலித்து பெரும் சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து தமிழ் சினிமா இயக்குனர் அட்லீயுடன் ஜவான் படத்தில் நடித்து அந்த படத்திலும் மாபெரும் வெற்றி குடுத்தார். உலகளவில் இப்படம் ரூ. 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
அட்லீ தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் எடுத்து அதன் மூலம் தனக்கென சிறந்த இயக்குனர் என்ற பட்டம் பெற்றவர். அட்லீக்கு பாலிவுட்டில் இது முதல் படம் என்பதால் எப்படி அந்த படம் இருக்கப்போகிறது என்ற சந்தேகம் ரசிகர் மத்தியில் எழுந்தது. ஆனால் அதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் அந்த படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட் குடுத்தது.
இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தில் ஷாருக்கானை நடிக்க வைக்க லோகேஷ் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆனால் அதற்கு ஷாருக்கான் சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஷாருக்கானுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர் உருவம் பதித்த நாணயத்தை பாரிஸில் இருக்கும் க்ரெவின் மியூஸியம் வெளியிட்டிருக்கிறது. இதற்கு திரையுலகத்தில் இருக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய சினிமாவில் இவருக்கு தான் இந்த பெரும் முதல் முறையாக கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.