சரத் பொன்சேகாவின் அதிரடி அறிவிப்பு

18

இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.

73 வயதான ஜெனரல் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக கடமையாற்றி வருவதோடு, 2010 ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியிருந்தார்.

இவ்வாறான ஒரு பின்னணியில் தான் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக சரத் பொன்சேகா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ஊழல் மோசடிகளை இல்லாத ஒலித்து இலங்கையை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையை முன்னோக்கி நகர்த்துவதற்கு அனைத்து இலங்கையர்களும் தம்முடன் இணைந்து கொள்ளுமாறும் சரத் பொன்சேகா தனது எக்ஸ் தளத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.

Comments are closed.