‘கூழாங்கல்’ படத்தின் மூலமா மக்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் இயக்குனர் பி. எஸ். வினோத்ராஜ். இப்படத்தை தொடர்ந்து கொட்டுக்காளி என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சூரி மற்றும் அன்னா பென் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த திரைப்படம் 74ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஃபோரம் பிரிவின் கீழ் தேர்வு செய்யப்பட்டு. பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் என்ற பெருமை படைத்தது கொட்டுக்காளி திரைப்படம்.
மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் கொட்டுக்காளி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 23 தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது
Comments are closed.