பொலநறுவையில், தமது மகனால், தாய் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
திம்புலாகல மனம்பிட்டிய மாகங்தொட கிராமத்தில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
56 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான கே.டி. ரம்யா ஸ்வர்ணலதா என்பவரே, சம்பவத்தில் தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகி உள்ளார்.
குறித்த தாய் மனம்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அத்துடன் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடந்த 18ஆம் திகதி பாதிக்கப்பட்ட தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய, அவருடைய மகனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தாயாரின் வளர்ப்பு நாய், மகன் வீட்டிற்கு சென்றமையால் ஏற்பட்ட வாக்குவாதமே தாக்குதலுக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, முன்னர் ஒரு தடவையும், மகனும் மருமகளும் குறித்த தாயை கொடூரமாக தாக்கியதாக சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Comments are closed.