ஜனாதிபதித் தேர்தலில் பைடன் போட்டியிடுவது குறித்து ஒபாமாவின் நிலைப்பாடு

20

எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் (Joe Biden) வெற்றிவாய்ப்பு கணிசமான அளவாக குறைந்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமா (Barrack Obama) கருதுவதாக சர்வதேச ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனநாயகக் கட்சி (Democratic Party) உறுப்பினர்களிடம் ஒபாமா கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜனாதிபத் தேர்தல் போட்டியிலிருந்து பைடன் விலகவில்லை எனில், அது வெள்ளை மாளிகைக்குள் ஜனநாயகக் கட்சி உள்நுழைவதை தடுக்கும் என ஒபாமா குறித்த கலந்துரையாடலின் போது கூறியுள்ளார்.

அத்துடன், இந்தத் தேர்தலில் பைடனால் நிச்சயம் வெற்றிபெற முடியாது என அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi) ஜோ பைடனிடம் தனிப்பட்ட முறையில் கூறியுள்ளார்.

இதிலிருந்து, ஜனநாயகக் கட்சியின் மூத்த ஆளுமைகளான ஒபாமா மற்றும் பெலோசி போன்றோர் பைடனின் தேர்தலில் போட்டியிடும் முடிவை மீள்பரிசீலனை செய்ய வலியுறுத்தியுள்ளமை புலப்படுகின்றது.

எனினும், இந்த வலியுறுத்தலை பைடன் நிராகரித்துள்ளதாகவே தெரியவருகின்றது.

சென்ற ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப்பை (Donald Trump) தோற்கடித்தது போன்று இம்முறையும் வெற்றிபெறும் நம்பிக்கையில் பைடன் உள்ளதாக அவரின் துணை பிரசார மேலாளர் குவென்டின் ஃபுல்க்ஸ் தெரிவித்துள்ளார்.

Comments are closed.