தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் பிக்குகள் முன்னணியின் அழைப்பாளர் வகாமுல்லே உதித்த தேரர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்தப்பட்டதனைத் தொடர்ந்து அனுரவின் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு அநேக பிக்குகள் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, அனுரகுமார திஸாநாயக்கவிற்கான பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
பொது வெளியில் நேரடியாக தோன்றாது கூட்டங்களில் பேசக்கூடிய வகையிலான வழிகள் குறித்து ஆராய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தங்களது அதிகாரத்திற்காக அரசியல்வாதிகள் எந்த வகையிலான ஈவிரக்கமற்ற செயல்களிலும் ஈடுபடக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.