இலட்சக்கணக்கில் நிகர வருமானம் பெறுபவர்களுக்கு சிக்கல்

13

புதிய வரிகளை விதிக்கும் முன்னர், வரி ஏய்ப்பு செய்த மற்றும் ஒத்திவைக்கப்பட்ட வரிகளை அறவிடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தற்போதைய சட்டங்கள் புதுப்பிக்கப்பட்டு, இவ்வாறு வரி ஏய்ப்பு செய்பவர்களிடம் இருந்து வரியை வசூலிக்கும் தனித்துவமான வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஏதேனும் ஒரு வழியில் வரி செலுத்துவதில் சிரமம் இருந்தால், அது குறித்து மேல்முறையீடு செய்யவும், நீதிமன்றத்தை நாடவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிமை உண்டு.

அவ்வாறு சிலரின் நீதிமன்ற நடவடிக்கைகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருவதால், நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைவதற்குள் அவர்கள் இறந்தும் விடுகின்றனர்.

மேலும், மாதம் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் நிகர வருமானம் உள்ளவர் மட்டுமே வரி செலுத்த வேண்டும் என்றும், வேறு இடத்தில் வரி செலுத்தியிருந்தால், மீண்டும் வரி செலுத்த வேண்டியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து பிராந்திய அலுவலகத்திற்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்குமாறும், வரி ஏய்ப்பு செய்பவர்களை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதுள்ள சட்டங்களை தகவல் தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.