அஜித் மற்றும் ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் கோலிவுட்டில் நட்சத்திர ஜோடியாக இருக்கின்றனர். அவர்களது ஒரு போட்டோ வெளியானாலும் அது இணையத்தில் பெரிய அளவில் வைரல் ஆகிவிடும்.
அஜித் நடித்து வந்த விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் பல்வேறு தடங்கல்களுக்கு பிறகு சமீபத்தில் தான் மீண்டும் தொடங்கியது. அசர்பைஜான் நாட்டில் தான் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
நடிகை ஷாலினி உடல்நலக்குறைவாக இருந்த நிலையில் அவருக்கு சென்னையில் நேற்று ஆபரேஷன் நடைபெற்று இருக்கிறது. ஆனால் கணவர் அஜித் வரவில்லை.
தான் சென்னைக்கு திரும்பி வந்துவிட்டால் விடாமுயற்சி ஷூட்டிங் நின்றுவிடும், தயாரிப்பாளருக்கு தான் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதால் தான் அஜித் வரவில்லையாம்.
அசர்பைஜான் நாட்டுக்கு செல்லும் முன்பே சர்ஜரிக்கான ஏற்பாடுகளை செய்து முடித்த அஜித், நேற்று வீடியோ கால் மூலமாக டாக்டர்கள் உடன் பேசி இருந்தாராம்.
Comments are closed.