ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டாரவின் மகனான, யசோத ரங்கே பண்டார இன்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் அலிமங்கட பிரதேசத்தில் இவர் பயணித்த கார் வீதியை விட்டு விலகி விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
அதற்கமைய , பாலித ரங்கே பண்டாரவின் மகன் பயணித்த கார் வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார வாகன விபத்து ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருவலகஸ்வெவ அலிமங்கட பிரதேசத்தில் இன்று (29) அதிகாலை அவர் பயணித்த கார் வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Comments are closed.