பொதுவேட்பாளர் தொடர்பில் யாழில் கலந்துரையாடல்

16

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – கோவில் வீதியில் அமைந்துள்ள நல்லூர் பவனில் நேற்றையதினம் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.

மேலும், மன்னார் மாவட்டம் சமகாலத்தில் எதிர்கொள்ளும் கனிம அகழ்வு மற்றும் காற்றாலை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.

இதன்போது, தமிழ் மக்கள் பொதுச் சபையை சேர்ந்தவர்கள் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களோடு கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.