இலங்கைக்கு சுற்றுலா செல்லும் தமது நாட்டவருக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை

0 2

இலங்கைக்கு சுற்றுலாவை மேற்கொள்ளும், தமது நாட்டவர்களுக்கு, பிரித்தானியா, நோய் அபாயத்துடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நுளம்புகளால் பரவும் நோயுடன் தொடர்புடைய அபாயங்களை முன்னிலைப்படுத்தி, இந்த பயண ஆலோசனை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சிக்குன்குனியா, டெங்கு மற்றும் ஜிகா வைரஸ் ஆகியவற்றின் அபாயங்கள் இந்த ஆலோசனையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இலங்கையில் தங்கியிருக்கும் போது இந்த சுகாதாரப் பிரச்சினைகளைத் தவிர்க்க சரியான தடுப்பு நடவடிக்கைகள் அவசியம்.

அத்துடன், பயணத்திற்கு குறைந்தது எட்டு வாரங்களுக்கு முன்பே இலங்கைக்கான அண்மைய தடுப்பூசி பரிந்துரைகளைச் சரிபார்க்குமாறு சுகாதார நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

எனவே பயணிகள் தங்கள் பயணங்களை ஆரம்பிப்பதற்கு முன்னர், குறிப்பிடத்தக்க சுகாதார அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரித்தானியா தமது நாட்டவரிடம் கோரியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.