நண்பன் படத்தில் விஜய் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா?

14

நடிகர் விஜய், அவரது நடிப்பில் அடுத்து தமிழ் சினிமாவில் கோட் படம் வெளியாக இருக்கிறது. The Greatest Of All Time என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்திற்கான படப்பிடிப்பு தமிழ்நாடு, கேரளா, ரஷ்யா என மாறி மாறி நடந்தது. அண்மையில் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கோட் படத்தில் இடம்பெறும் சின்ன சின்ன என 2வது பாடல் வெளியாகி இருந்தது.

இதில் விஜய்-சினேகா இடம்பெற்றிருந்தார்கள், பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

விஜய் காதல், ஆக்ஷன், மாஸ் என எந்த ஜானரில் நடித்தாலும் கில்லி போல கலக்கிவிடுவார்.

அப்படி அவர் புகுந்து விளையாடும் ஒரு ஜானர் என்றால் அது காமெடி தான். அப்படி காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் உருவான படம் தான் நண்பன்.

சேத்தன் பகத் எழுதிய Five Point Someone என்ற நாவலை தழுவி ஹிந்தி 3 இடியட்ஸ் படம் வந்தது. அதனை தமிழில் நண்பன் என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த். சத்யராஜ், இலியானா என பலர் நடித்திருந்தார்கள்.

ஆனால் இந்த படத்தில் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தேர்வானது சூர்யா தானாம். இந்த தகவலை சேத்தன் பகத் தனது டுவிட்டரில், இன்று மும்பையில் ஜிம்மில் தமிழ் சூப்பர் ஸ்டார் சூர்யாவை சந்தித்தேன்.

ஈரமான ரோஜாவே 2 சீரியல் புகழ் நடிகை ஸ்வாதியின் புதிய தொடர்… எந்த தொலைக்காட்சி, பெயர் விவரம்
ஈரமான ரோஜாவே 2 சீரியல் புகழ் நடிகை ஸ்வாதியின் புதிய தொடர்… எந்த தொலைக்காட்சி, பெயர் விவரம்
அவர் 3 இடியட்ஸ் தமிழில் நடிக்கிறார் என பதிவிட்டிருக்கிறார். 2010ம் ஆண்டு அவர் பதிவிட்ட டுவிட் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

Comments are closed.