புகையிலை பாவனை காரணமாக வாய்ப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று வியாழக்கிழமை (20) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் வாய்ப் புற்றுநோய் காரணமாக நாளொன்றுக்கு மூன்று பேர் உயிரிழக்கின்றனர்.
அத்தோடு, நாட்டில் வருடாந்தம் மூவாயிரம் வாய்ப் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
புகையிலை பாவனை மற்றும் புகையிலையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்களை பயன்படுத்துவதாலும் வாய்ப் புற்றுநோய் ஏற்படுவதாக வைத்திய பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.