கழன்று தனியே சென்ற தொடருந்து இயந்திரம்: சாமர்த்தியமாக செயற்பட்ட பயணி!

0 4

பிலிமத்தலாவை – பேராதனை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் கொழும்பு கோட்டையிலிருந்து பயணித்த டிக்கிரி மெனிகே அதிவேக தொடருந்தின் பின்புற இயந்திரம் கழன்று தனியே சென்றுள்ளது.

அதன்போது, ஏற்படவிருத்த பாரிய விபத்தொன்று பயணியொருவரின் கவனத்தால் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இரண்டு S.12 வகை இயந்திரங்கள் பொருத்தப்பட்ட டிக்கிரி மெனிகே அதிவேக தொடருந்து, மதியம் 12.40 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு பதுளை நோக்கி பயணித்தபோது, ​​இவ்வாறு பின்புற இயந்திரம் கழன்று தனியே சென்றுள்ளது.

சம்பவத்தின் போது, பின்புற இயந்திரம் இல்லாமல் தொடருந்து முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்ததை அவதானித்த பயணி ஒருவர் அவசர சங்கிலியை இழுத்து தொடருந்தை நிறுத்தியுள்ளார்.

இதனால் குறித்த தொடருந்து, சுமார் 30 அடி முன்னோக்கி நகர்ந்து நின்ற நிலையில், பிரிந்து சென்ற பின்புற இயந்திரமும் மீண்டும் தொடருந்துக்கு அருகில் வந்து நின்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.