பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் படிவம்- வவுனியாவில் விநியோகம்

0 0

நாளை 15 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் காலை 8.05 மணி வரை நாடு பூராகவும் நடைபெறவுள்ள வனவிலங்கு கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கான படிவங்கள் வவுனியா மாவட்டத்தில் கிராம அலுவலர் ஊடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

இந்தச் செயற்பாட்டை மிகவும் துல்லியமாகவும், திறமையாகவும் நடத்தும் நோக்கில் கமத்தொழில் அமைச்சின் வளாகத்தில் ஒரு செயல்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது.

கால்நடை கணக்கெடுப்பின் போது ஏற்படக்கூடிய ஏதேனும் சிக்கல்கள் குறித்து விசாரிக்க இந்த செயல்பாட்டு அறை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை செயல்படும் என்று கமத்தொழில், கால்நடை வளங்கல், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஏதேனும் சிக்கல் இருப்பின், செயல்பாட்டு அறையின் தொலைபேசி எண்ணான 011-2034336 ஐ அழைத்து விசாரணைகளை மேற்கொள்ளலாம் என்று அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

அதற்கமைவாக பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வன விலங்குகளின் எண்ணிக்கையைக் குறிப்பதற்காக அரசாங்கத்தால் அச்சிடப்பட்ட படிவங்கள் கிராம அலுவலர் ஊடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

அதில் கருங்குரங்கு, குரங்கு, மரஅணில், மயில் என்பவற்றினுடைய பெயர்கள குறிப்பிட்டு கணெக்கெடுப்பதற்கான வகையல் படிவம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.