இலங்கையில் முன்னாள் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் குற்ற வலையமைப்பு

25

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது கட்டளையின் கீழ் உள்ள அதிகாரிகளைப் பயன்படுத்தி, குற்றவியல் வலையமைப்பை இயக்கியதாக சட்டமா அதிபர் திணைக்களம் இன்று(12) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.

தென்னகோனின் கைது நடவடிக்கையை நிறுத்தக் கோரிய மனுவை விசாரித்தபோதே, இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றப்பிரிவின் (சி.சி.டி) அதிகாரிகளைப் பயன்படுத்தி வெலிகமவில் உள்ள W15 விருந்தகம் மீது தாக்குதல் நடத்த தேசபந்து திட்டமிட்டதாக, மேலதிக மன்றடியார் நாயகம் திலீப பீரிஸ் கூறினார்.

ஒரு பொலிஸ் சார்ஜென்ட்டின் மரணத்திற்கு வழிவகுத்த இந்த சம்பவம், தென்னகோனுக்கும், விருந்தக உரிமையாளருக்கும் இடையிலான தனிப்பட்ட தகராறுடன் தொடர்புடையது என்று பீரிஸ் கூறினார்.

இதன்படி, தென்னகோன் தனிப்பட்ட மோதல்களைத் தீர்க்க பொலிஸாரை “துணை ராணுவப் படையாக” பயன்படுத்தியதாக பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.