இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை,, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, வாழ்த்தியுள்ளார்.
அத்துடன் தொடர்ச்சியான பொருளாதார சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தை, அவர் வலியுறுத்தியுள்ளார்.
அநுர குமார திசாநாயக்கவுடனான தனது முதல் மெய்நிகர் சந்திப்பில், இந்த விடயங்களை அவர் பகிர்ந்துக் கொண்டார்.
பொருளாதார சீர்திருத்தங்கள் நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் மிக முக்கியமானவை என்பதை தாம், இலங்கையின் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்ததாக, ஜோர்ஜீவா, தமது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.