இன்று முதல் கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு எச்சரிக்கை

12

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்று முதல் அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (19) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

அந்தவகையில், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

அத்துடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகபட்சமாக 75 மி.மீ அளவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Comments are closed.