மீண்டும் இரு தரப்பு சந்திப்புக்கு தயாராகும் உக்ரைன் -அமெரிக்கா

0 6

அமெரிக்க மற்றும் உக்ரைன் அதிகாரிகள் அடுத்த வாரம் சவுதி அரேபியாவில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் ஓவல் அலுவலகத்தில் இரு நாட்டு ஜனாதிபதிகளான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, உறவை மீண்டும் உறுதியான நிலைக்குக் கொண்டுவர இரு தரப்புக்குமிடையே குறித்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

முதல் சந்திப்பின் தோல்விக்குப் பிறகு, அமெரிக்க உயர் அதிகாரிகள் உக்ரைனுடனான உறவுகளை மீண்டும் சரிசெய்ய முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், புதிய சுற்று பேச்சுவார்த்தைகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்து வருவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு தரப்பு கூறியுள்ளது.

கடந்த செவ்வாயன்று ஜெலென்ஸ்கிஒரு சமூக ஊடகப் பதிவில், பேச்சுவார்த்தை மேசைக்கு வரத் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

மேலும், ஓவல் அலுவலகக் கூட்டம் தொடர்பில் வருத்தம் தெரிவித்ததாகவும், ஆயுதங்களை வழங்கியதற்காக ட்ரம்பிற்கு நன்றி தெரிவித்ததாகவும், ட்ரம்பிற்கு வசதியாக  கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.