இலங்கையில் பெருங்குடல் புற்றுநோய் கணிசமாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, இதுவரை, 3,000 நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு தரவுகளின்படி, உலகளவில் புதிய பெருங்குடல் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 1.9 மில்லியன் ஆகும். இதில் இறப்புகளின் எண்ணிக்கை 900,000 ஐ தாண்டியுள்ளது.
இந்தநிலையில் நோயின் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவது பெரும்பாலும் முழுமையான குணப்படுத்துதலுக்கு வழிவகுக்கும் என்று,தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக சுகாதார நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ கூறியுள்ளார்.
வயதுக்கு ஏற்ப, குறிப்பாக 50 வயதிற்குப் பிறகு, புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதால் பெருங்குடல் புற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது என்றும் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், 2040 ஆம் ஆண்டுக்குள் சுமார் 3.5 மில்லியன் நோயாளிகளுக்கு பெருங்குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படும் என்று பெருங்குடல் அறுவை சிகிச்சை நிபுணர் வசந்த விஜேநாயக தெரிவித்துள்ளார்.
40 வயதுக்குப் பிறகு, சுமார் 50% பேருக்கு பெருங்குடல் புற்றுநோய் ஏற்படலாம். அத்துடன் 23 ஆண்களில் ஒருவருக்கும் 26 பெண்களில் ஒருவருக்கும் பெருங்குடல் புற்றுநோய் உருவாகும் அபாயம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
எனினும், அடையாளம் காணப்படும் கட்டிகளை அகற்றி நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் விஜயநாயக்க கூறியுள்ளார்.