வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

0 1

வெளிநாடுகளில் இருந்து  இலங்கைத் தொழிலாளர்களால் அனுப்பப்படும் பணத்திற்கு வரி அறவிடப்பட மாட்டாது என அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் போது அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களால் அனுப்பப்படும் பணத்திற்கு 15 வீதம் வரி அறிவிடப்படும் என போலியான தகவல்கள் வெளியிடப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்படும் நிலையில், அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான தகவல்கள் போலியாக பரப்பப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பில் போலியான தகவலை வெளியிட்ட தென்னிலங்கை பத்திரிகை ஒன்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டிஜிட்டல் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக வருமானம் ஈட்டுவோருக்கு எதிராக வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கும் சலுகை அடிப்படையிலேயே வரி விதிக்கப்படவுள்ளது. 150000 ரூபாவுக்கும் குறைவான வருமானத்தை பெறும் டிஜிட்டல் செயற்பாட்டர்களுக்கு வரி விதிக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.