உடல்நிலை சரியில்ல! சாப்பிட கூட வழியில்ல.. தவித்த பிரபல நடிகைக்கு உதவிய KPY பாலா

0 1

80ஸ் காலகட்டத்தில் தனது நகைச்சுவை நடிப்பில் மக்களை சிரிக்க வைத்தவர் நடிகை பிந்து கோஷ். இவர் கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் தவித்து வருகிறார்.

அவருடைய உடலில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் நிலையில், மருத்துவ செலவிற்கும், சாப்பிட கூட பணம் இல்லை என்றும் பேட்டிகளில் கண்கலங்கி பேசியிருந்தார். ஆரம்பத்தில் இவருக்கு உதவி செய்த நடிகர்கள் கூட தற்போது கண்டுகொள்வது இல்லையாம். மேலும் ரஜினிகாந்த், கமல் ஹாசன் போன்ற நடிகர்களிடம் உதவி கேட்டும் எந்த ஒரு ரெஸ்பான்ஸ் இல்லையாம்.

இந்த நிலையில், பிந்து கோஷின் நிலைமை குறித்து நடிகை ஷகீலா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர். இதில் சினிமா துறையின் மூலம் நம்மை சிரிக்க வைத்த பிந்து கோஷ் இப்போது சாப்பிட கூட வழியில்லாமல் இருக்கிறார். அவர் யார் வாழ்வதற்கு உங்களால் முடிந்ததை கொடுத்து உதவுங்கள் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது பிந்து கோஷுக்கு உதவ KPY பாலா முன் வந்துள்ளார். தொடர்ந்து பல உதவிகளை சேட்டு வரும் KPY பாலா தற்போது பிந்து கோஷுக்கு ரூ. 80 ஆயிரம் கொடுத்து உதவியுள்ளார். பாலாவை பிந்து கோஷிடம் அழைத்து சென்றது ஷகீலா தான்.

இதுகுறித்து பேசிய ஷகீலா, “ஒருத்தருக்கு உடம்பு சரியில்ல-னு நேத்து தான் பாலா கிட்ட பேசிட்டு கூப்பிட்டேன். என் குழந்தை இன்னிக்கி வந்து நிக்கிறான். 80 ஆயிரம் ரூபாய் அவங்க கைல கொடுத்துவிட்டு போய்ட்டான். இதுமேலே என்ன மருத்துவ செலவு வந்தாலும் என்ன கூப்புடுங்க-னு சொல்லிட்டு போய்ட்டான்” என கூறியுள்ளார்.

நடிகை பிந்து கோஷுக்கு பாலா வந்து உதவியது குறித்து நடிகை ஷகீலா வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.