இந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான ஜோதிகா தற்போது பாலிவுட் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். கடைசியாக அவர் தமிழில் ‘உடன்பிறப்பே’ என்ற படத்தில் நடித்திருந்தார் இது நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகியது. மேலும் மலையாளத்தில் மம்மூட்டி உடன் ‘காதல் தி கோர்’ படத்தில் நடித்திருந்தார்.
இப்போது பாலிவுட் பக்கம் அதிக கவனம் செலுத்தி வரும் ஜோதிகா, கடந்த ஆண்டு ‘சைத்தான்’ மற்றும் ‘ஸ்ரீகாந்த்’ என்ற திரைப்படங்களில் நடித்தார். தற்போது இந்த ஆண்டு ‘Dabba Cartel’ என்ற வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த வெப் தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதில் பல முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர்.
எனினும் இந்த வெப் தொடரில் ஜோதிகா சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்துள்ளதால் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சி தொடர்பான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவியுள்ளன மற்றும் பலர் இதை விமர்சித்து வருகின்றனர்.