இந்த வருடம் மே மாதத்திற்கு பிறகு தேங்காய் விலை முந்தைய நிலைக்கு திரும்பும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணதுங்க இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் நாட்களில் தேங்காய் இறக்குமதி செய்ய அனுமதி பெற்ற இறக்குமதியாளர்கள், தேங்காய் இறக்குமதியை ஆரம்பிப்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தேங்காயின் விலையானது பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டு மக்களுக்கு சாதாரண விலைக்கு தேங்காயை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.