ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.
இந்தக் கூட்டமானது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஜூர்க் லோபர் தலைமையில் நடைபெறுகின்றது.
கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் உரையாற்றிய ஜூர்க் லோபர் தனிமனித அடிப்படை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
அத்தோடு, சர்வதேச சட்டத்தையும் நடைமுறையையும் நினைவுபடுத்தியிருந்தார்.
கடந்த 80 வருட காலமாக மனித உரிமைகளை நிலைநாட்டும் செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
மனித உரிமைகளுக்கு எதிரான செயற்பாடுகள் உலகளாவிய ரீதியில் அதிகரித்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஜூர்க் லோபர் தெரிவித்துள்ளார்.