நீதிமன்ற படுகொலை! அதுருகிரிய பொலிஸ் அதிகாரி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

16

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அதுருகிரிய  பொலிஸ் அதிகாரி தொடர்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட அதுருகிரிய பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் துபாயில் உள்ள கெஹல்பத்தர பத்மேவுக்கும் இடையேயான நெருங்கிய தொடர்பு குறித்த விவரங்கள் விசாரணைகளில் வெளியாகியுள்ளன.

இந்த தொடர்பு நீண்ட காலமாக நடந்து வந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிளின் வங்கிக் கணக்கிற்கு சமீபத்தில் 68 இலட்சம் ரூபா  வரவு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சஞ்சீவ கொலைக்கு ஆதரவளித்ததற்காக கெஹல்பத்தர பத்மே செலுத்திய பணமாக இந்தப் பணம் இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

அதுருகிரி பொலிஸ் கான்ஸ்டபிள் தனக்குச் சொந்தமான கேடிஹெச் ரக வானை கொலையாளியிடம் தப்பிக்கக் கொடுத்ததால் இருவருக்கும் இடையேயான தொடர்பு மேலும் தெரியவந்துள்ளது.

புத்தளம் பகுதியில் கொழும்பு குற்றப்பிரிவு மற்றும் பொலிஸ் சிறப்புப் படையினரால் கொலையாளியுடன் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் ஒரு முக்கியமான ஆதாரமாக, வானில் காணப்பட்ட பற்றுச்சீட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் போது அதுருகிரிய பொலிஸ் அதிகாரி அடையாளம் காணப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments are closed.