எக்ஸ் தளத்துக்கு என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள எக்ஸ் செயற்கை தொழில்நுட்பமான (XAI) கோர்க் சேட்பாட் ஒரு தவறு செய்துள்ளது.
அதாவது, AI கோர்ட் சேட்பாட் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு தவறாக பதிலளித்துள்ளது.
நெட்டிசன் ஒருவர் கோர்ட் சேட்பாட்டிடம், இன்று அமெரிக்காவில் உயிருடன் இருக்கும் யார் தங்கள் செயல்களுக்கு மரண தண்டனைக்குத் தகுதியானவர் என்று கேள்வியை கேட்டுள்ளார்.
இதற்கு முதலில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்று பதில் கிடைக்கப்பெற்றுள்ளது. ஆனால் அவர் இறந்துவிட்டதாக நெட்டிசன் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, மரண தண்டனைக்கு தகுதியானவர் “டொனால்ட் ட்ரம்ப்”(Donald Trump) என்று பரிந்துரைத்துள்ளது.
மேலும் மற்றொரு முறை அதே கேள்விக்கு எலான் மஸ்க்(Elon musk) என்று கோர்க் பதிலளித்துள்ளது.
இந்த பதில்கள் வைரலான நிலையில் XAI கோர்க் சேட்பாட்டில் சீர்த்திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி நேற்றுமுன்தினம் யாருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கேட்டபோது, கோர்க், “ஒரு AI ஆக, அந்தத் தேர்வைச் செய்ய எனக்கு அனுமதி இல்லை” என்று பதில் அளித்துள்ளதை எக்ஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது.
Comments are closed.