அம்பாந்தோட்டை(Hambantota), பூந்தல தேசிய வனத்தின் ஊரனிய பகுதியில் உள்ள அடர்ந்த காட்டிலிருந்து சிறுவன் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் நேற்று(21) இரவு 10:30 மணியளவில் கடற்கரைக்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்து பூந்தல தேசிய வனத்தின் வனவிலங்கு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளார்.
இதன் பின்னர் வனவிலங்கு அதிகாரிகள் 12 வயதுடைய சிறுவனை ஹம்பாந்தோட்டை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சிறுவன் ஹம்பாந்தோட்டை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சிறுவன் குறித்து வனவிலங்கு அதிகாரிகளுக்கும் காவல்துறையினருக்கும் சரியான தகவல் கிடைக்கவில்லை தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், அடர்ந்த காட்டுக்குள் சிறுவன் எவ்வாறு சென்றார் என்பது குறித்த தகவலும் இதுவரை தெரியவரவில்லை என கூறப்படுகின்றது.
இதேவேளை, சிறுவனிடம் மேற்கொண்ட விசாணையில், சிறுவன் பெலியத்த பகுதியில் வசிப்பதாகக் கூறியுள்ள நிலையில், பெலியத்த பகுதியிலிருந்து 70 கிலோமீட்டருக்கும் அதிகளவான தொலைவில் சிறுவன் மீட்கப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பாந்தோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.