உள்ளூராட்சி தேர்தல் : தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு

0 2

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பில் தேர்தல் ஆணையம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது

இதன்படி கட்டுப்பணத்தை திரும்ப பெறுவதற்காக பெப்ரவரி 28, 2025 க்கு முன்னர் மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் எழுத்துபூர்வமாக விண்ணப்பிக்கமுடியும் என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு இன்று(19) அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலுக்கு வைப்புத்தொகை

2023உள்ளூராட்சி தேர்தலுக்கு வைப்புத்தொகை செலுத்திய வேட்பாளர்கள், வைப்புத்தொகை சிட்டைகளை தாங்கள் தொடர்புடைய மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் வைப்புத்தொகையைப் பெறலாம் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வேட்பாளர்கள் தங்கள் வைப்புத்தொகை சிட்டைகளை பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன் எழுத்துபூர்வ கோரிக்கையுடன் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தகுதியான வேட்பாளர்களுக்கு நிதியை தாமதமின்றி திருப்பித் தர தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.