தற்போதைய நடைமுறையில் வாகன இறக்குமதி அபாயகரமானது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று (18.02.2025) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.6 சதவீதத்திற்கு வரியை அதிகரிக்க வேண்டும்.
இதற்கு மோட்டார் வாகனங்கள் இறக்குமதி செய்வதே பிரதான பங்களிப்பு என ஜனாதிபதி நேற்று தெரிவித்தார்.
அது எப்படியென நான் தேடி பார்த்த போது, வரியில் பாதி வாகன இறக்குமதியில் இருந்து வருகிறது. எனவே வாகனங்களை இறக்குமதி செய்வது மிகவும் ஆபத்தானது.
ஏனெனில் வரியுடன் மிகப்பெரும் தொகையை செலுத்தி இலங்கையில் வாகனங்களை கொண்டு வரும் அளவிற்கு செல்வந்தர்கள் இருப்பதாக நான் நினைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.