அதிகரித்து வரும் வெப்பநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இது தொடர்பில் பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறு திணைக்களம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
நிலவும் வெப்பநிலை அடுத்த 24 மணி நேரத்திற்குள் எச்சரிக்கை மட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், இரத்தினபுரி மாவட்டத்திலும் வெப்பநிலை அடுத்த 24 மணித்தியாலங்களில் எச்சரிக்கை மட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஏற்படப்போகும் மாற்றம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Hot Weather Alert In Sri Lanka
முதலாம் இணைப்பு
நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக வீதிகளில் வேலை செய்பவர்கள் மற்றும் வெளிவேலைகளில் ஈடுபடுபவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் வெப்பமான வானிலை நிலவுகிறது.
இது வெளிவேலைகளில் ஈடுபடும் நபர்களை கடுமையாக பாதிக்கின்றது.
எனவே, வீதிகளில் வேலை செய்பவர்கள் மற்றும் வெளிவேலைகளில் ஈடுபடுபவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த காலங்களில், வெப்பமான வானிலை காரணமாக பல பகுதிகளில் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
எனவே, வெப்பமான வானிலை குறித்து பொதுமக்கள் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும்.
கடும் வெப்பத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.