பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நீதிக்கான பேரணி தொடர்பிலான வழக்கு நீதிமன்றில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதனடிப்படையில், குறித்த வழக்கு நாளை நாளை (14) கிளிநொச்சி (kilinochchi) நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளது.
இந்த வழக்கிற்கு முன்னிலையாகுமாறு சிறிலங்கா காவல்துறையினர் சிங்கள மொழியில் குறித்த அறிவித்தலை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர், வேலன் சுவாமிகள் (velan swamigal) தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சிங்கள மொழியில் வழங்கப்பட்ட அறிவித்தல் மூலம் மொழியுரிமை முற்றாக மறுக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.