தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலாபால்.
இவர் முதல் திருமணம் விவாகரத்தில் முடிய பின் படங்கள், போட்டோ ஷுட்கள், ஆன்மீக பயணம் என நிறைய மேற்கொண்டு வந்தார்.
கடந்த ஆண்டு தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியையும் அறிவித்தார்.
கர்ப்பமாக இருந்தாலும் நிறைய போட்டோ ஷுட்கள் நடத்துவது, பட புரொமோஷனில் கலந்துகொள்வது என பிஸியாகவே இருந்தார். அமலாபாலின் வளைகாப்பு புகைப்படங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் வைரலானது.
இந்த நிலையில் கடந்த ஜுன் 11ம் தேதி அமலாபாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அமலாபால் குழந்தையுடன் வரும்போது எடுக்கப்பட்ட வீடியோவுடன் இந்த சந்தோஷ செய்தியை அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
அதோடு அவர்களின் மகனுக்கு இலை என்றும் பெயர் வைத்துள்ளனர்.
இது யூதர்களின் மொழியான ஹீப்ரு மொழியின் பெயராம். இந்த பெயருக்கு தமிழில் பரலோகம், சொர்க்கம், விண்ணுலகம் என்று கூறப்படுகிறது.
Comments are closed.